ஆரோக்கியம்

Healthy Breakfast: தினசரி ஆரோக்கியத்துக்கு உகந்த காலை உணவுகள்!

Published

on

ஒரு நாளில் நாம் ஊக்கத்துடன் இயங்க மிகவும் முக்கியமானது காலை நாம் சாப்பிடும் உணவு. காலை உணவை தவிர்த்தாலோ, சரியான உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலோ, அது நாள் முழுவதையும் பாதிக்கும். குறிப்பாக சரியாக செரிமானாம் ஆகாத உணவு வகைகளை உட்கொண்டால், அவை தரும் பிரச்சனைகளை சொல்லி விவரிக்க முடியாது.

காலையில் நல்ல செரிமானாத்துக்கு உதவும் உணவு வகைகளை கீழே பார்ப்போம்:

1.பப்பாளி:

பாப்பாளி பழத்தில் செரிமானத்துக்கு உதவும் என்சைம் மற்றும் பப்பைன் உள்ளன. காலையில் பப்பாளி பழத்தை சாப்பிடுவது நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும். பல்வேறு ஊட்டச் சத்துகளும் இதில் நிரம்பியுள்ளதால் காலைக்கு ஏற்ற உணவாகும்.

2.ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ, சி, பல்வேறு மினரல்கள், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் அடங்கியிருக்கின்றன. மலச்சிக்கலைப் போக்கி உடலுக்குத் தெம்பு கொடுக்கும் ஆப்பிள்.

3.வெள்ளரி

மிகவும் எளிமையாள வெள்ளரியில் என்சைம், எரஸ்பின் உள்ளிட்டவைகள் உள்ளதால், செரிமானத்துக்கு உகந்தது. வயிற்றெறிச்சல், வாயுத் தொல்லைகளைப் போக்கி நாள் முழுவதும் நம்மை சுகமாக வைத்திருக்கும் உணவு வெள்ளரி.

 

Trending

Exit mobile version