ஆரோக்கியம்

Aloo Mattar Poha Recipe: சுவையான ஆலு மட்டர் போஹா ரெசிபி!

Published

on

மகாராஷ்டிராவில் பாரம்பரிய காலை உணவுகளில் போஹாவும் ஒரு முக்கியமான உணவாகும். இதை செய்வது எளிது. போஹா என்பது குழந்தைகளுக்கும் ஒரு ஆரோக்கியமான உணவு விருப்பமாகும். இந்த ஆலு மட்டர் போஹா அசல் கண்ட போஹாவின் மாறுபாடு.

மகாராஷ்டிராவில் இது கண்ட போஹா என்று அழைக்கப்படுகிறது ஏன்னென்றால் மகாராஷ்டிராவில் கந்தா அல்லது வெங்காயம் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இன்னும் சுவையாக இருக்க உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்க்கிறோம்.

ஆலு மட்டர் போஹா

போஹாவில் கலோரிகள் குறைவாகவும், கார்ப் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. போஹாவில் உள்ள நல்ல கார்போஹைட்ரேட், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க காலையில் தேவைப்படும் நமது ஆற்றலை அதிகரிக்கிறது.

நார்ச்சத்து மற்றும் புரதம் இருப்பதால், அது நம்மை நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்கும். இது நமது சரியான எடையை பராமரிக்க உதவுகிறது. உங்கள் காலை உணவுக்கு ஒரு கப் க்ரீன் டீயுடன் இணைக்கவும்.

ஆலு மட்டர் போஹா செய்ய தேவையான பொருட்கள்:

  • அவல் – 1 கப்
  • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது )
  • வேகவைத்த பச்சைப் பட்டாணி – ஒரு கப்
  • வேகவைத்த உருளைக் கிழங்கு – 2
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு

தாளிக்க:

  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
  • எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு – தேவையான அளவு

செய்முறை:

  • அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அவலை பாலிலும் ஊற வைக்கலாம். சுவையாக இருக்கும்.
  • சிறிது நேரம் கழித்து அவலை வடிக்கட்டவும்.
  • கொத்தமல்லியை பச்சை மிளகாயுடன் சேர்த்தி மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பச்சை மிளகாய், மஞ்சள் தூள் கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதோடு கொத்தமல்லி விழுதைச் சேர்க்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
  • நன்றாக வதங்கிய பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி மற்றும் உருளைக் கிழங்கை சேர்க்கவும். நன்கு வதக்கிய பின், அவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள்.
  • பிறகு, கொத்தமல்லி இலைகள் மேலே தூவி இறக்கவும்.
  • சுவையான ஆலு மட்டர் போஹா ரெடி!

Trending

Exit mobile version