தமிழ்நாடு

கொத்து கொத்தாக கொரோனா பரவும் அபாயம்: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் மக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் கொத்துக்கொத்தாக கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிராக தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பாக அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தினமும் தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக தமிழக அரசு ஒரு சில தளர்வுகளையும் அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த தளர்வுகளை மக்கள் சாதகமாக எடுத்துக் கொண்டு அலட்சியமாக செயல்படுவதால் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா அதிகரித்து வருவதாகவும் தமிழக அரசு எவ்வளவுதான் அறிவுறுத்தியும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவில்லை என்றும் வருத்தத்துடன் கூறினார்.

மேலும் பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டால் கொத்துக்கொத்தாக கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், கொரோனா வைரஸே இல்லை என்ற பூஜ்ஜியம் இலக்கை எட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version