ஆரோக்கியம்

உங்கள் சமையலறை ஸ்பாஞ்ச் பாதிக்கக்கூடிய நோய்கள்! இது பாதுகாப்பா?

Published

on

நாம் தினமும் சமையலறையை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தும் கிச்சன் ஸ்பாஞ்சுகள் நுண்ணுயிர் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த இடமாக செயல்படுகின்றன என்று டியூக் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவப் பொறியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவை சுகாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் மொத்தமாக அதிகரிக்க வழிவகுக்கும்.

ஒரு ஸ்பாஞ்சில் ஒரு கன சென்டிமீட்டருக்கு சுமார் 54 பில்லியன் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன, இது கழிப்பறையை விட கூட அபாயகரமாக இருக்கலாம். இதனால், மூளைக்காய்ச்சல், நிமோனியா மற்றும் இரத்தத்துடன் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன.

ஸ்பாஞ்சில் காணப்படும் ஆபத்தான பாக்டீரியாக்கள்:

  • கேம்பிலோபாக்டர் – வயிற்றுப்போக்கு, குடல் வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும்.
  • என்டோரோபாக்டர் குளோகே – சுவாச பாதை, தோல் மற்றும் உள் உறுப்புகளை பாதிக்கும்.
  • ஈ. கோலி – உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கு மற்றும் உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை உருவாக்கும்.
  • கிளெப்சில்லா – நிமோனியா, சிறுநீர் பாதை தொற்றுகளை உருவாக்கும்.
  • மொராக்செல்லா – ஈரமான ஆடைகளில் துர்நாற்றத்தை உருவாக்கி, தோல் மற்றும் கீல்வாதத்தை ஏற்படுத்தும்.
  • சால்மோனெல்லா – குடல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
  • ஸ்டேஃபிளோகோகஸ் – தோல் மற்றும் மென்மையான திசு தொற்றுகளை உருவாக்கும்.
  • அதனால், பாத்திரங்களை சுத்தம் செய்ய ஸ்பாஞ்சுகளை தவிர்த்து, ஸ்க்ரப் பிரஷ்கள், சிலிகான் பிரஷ்கள், அல்லது ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மெட்டல் ஸ்க்ரப்களை பயன்படுத்துவது நல்லது.

 

Poovizhi

Trending

Exit mobile version