தமிழ்நாடு
மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் இடமாற்றம்: என்ன காரணம்?
கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மட்டும் தொடர்ந்து திமுக ஆட்சியிலும் அதே பதவியில் தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சற்று முன் வெளியான அறிவிப்பின்படி சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை புதிய செயலாளராக செந்தில்குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுகாதாரத் துறையில் ஊழல் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.