ஆரோக்கியம்

பழைய சோறு சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!

Published

on

தமிழர்களின் வாழ்வில் ஒரு காலத்தில் பழைய சோறு, கேப்ப கூழ், கம்பங்கூழ் என்பதெல்லாம் தினசரி உணவாக இருந்தன. குறிப்பாக காலையில் உட்கொள்ளும் உணவாகவே இவைகள் இருந்தன. ஆனால், நவீன யுகத்தில் ஸ்மூதி குடிப்பது, பிரெட் அண்டு பட்டர் சாப்பிடுவது, சீரியல் சாப்பிடுவது என பலர் காலை உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டனர். இதனால் நம் வீடுகளில் தினமும் கிடைத்த உணவை செய்வது எப்படி என்பதை மறந்துவிட்டோம்.

தற்போது பல கடைகளில் காலையில், ‘பழைய சோறு’ விற்கப்படும் சூழலுக்கு நிலைமை வந்துவிட்டது. இந்நிலையில் பழைய சோறு சாப்பிடுவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி சுகாதாரத் துறை ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளது.

60 பேரை இந்த ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியுள்ளது சுகாதாரத் துறை. அனைவருக்கும் காலையில் பழைய சோறு சாப்பிட கொடுத்துள்ளார்கள். அப்படி தினமும் பழைய சோறு சாப்பிட்டு வந்தவர்களுக்கு குடல் அழற்சி, அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. குடல் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு காலையில் பழைய சோறு சாப்பிடுவது சரியான தீர்வாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் சுகாதாரத் துறை, சமீப காலமாக குடல் சார்ந்த பிரச்சனைகளால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் எச்சரித்துள்ளது. எனவே, முடிந்தவரை காலையில் பழைய சோறு சாப்பிடும் பழக்கத்தை அனைவரும் வளர்த்துக் கொள்வோம்.

 

 

 

 

Trending

Exit mobile version