சினிமா செய்திகள்
மாஃபியாவில் இவர் தான் அருண்விஜய்க்கு வில்லன்!
![D_RhaSzU4AAvoVL - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/D_RhaSzU4AAvoVL.jpg)
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் அருண்விஜய்யின் மாஃபியா திரைப்படத்தின் வில்லன் குறித்த அப்டேட்டை லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி திருட்டுப் பயலே 2 படத்தில் மிரட்டும் டெக் வில்லனாக நடித்திருந்த நடிகர் பிரசன்னா தான் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
புகை பிடிப்பது போன்ற அவரது ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அவருக்கு இந்த படத்தில் டிகே என பெயர் வைக்கப்பட்டுள்ள விவரத்தையும் லைக்கா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள பிரசன்னாவிற்கு மேலும், ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.