சினிமா செய்திகள்

ஹேப்பி பர்த்டே தளபதி ஹேஷ்டேகை பின்னுக்குத்தள்ளிய தல ரசிகர்கள்!

Published

on

தல தளபதி ரசிகர்களுக்கு இடையே எப்போதும் போட்டி போர் போல நிலவி வருகிறது. விஜய் பிறந்தநாளான இன்று கூட அந்த போட்டி ஓயவில்லை. ஹேப்பி பர்தே தளபதி ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்த நிலையில், அதனை பொறுக்க முடியாத அஜித் ரசிகர்கள், என்றும் தல அஜித் என்ற ஹேஷ்டேகை இந்தியளவில் முதலிடத்தில் டிரெண்ட் செய்துள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் ஃபர்ஸ்ட் அண்ட் செகண்ட் லுக் போஸ்டர்கள் அறிவிப்பெல்லாம் ட்விட்டர் டிரெண்டிங்கில் நேற்று இருந்த அளவுக்கு இன்று வைரலாகவில்லை. ஆனால், விஜய்யின் பிறந்தநாள் குறித்த ஹேப்பி பர்த்டே தளபதி ஹேஷ்டேக் நள்ளிரவு முதலே ட்விட்டரில் இந்தியளவில் டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது.

இந்நிலையில், அஜித் ரசிகர்கள், அந்த ஹேஷ்டேகை பின்னுக்குத் தள்ளும் வேலையில் வெற்றி கண்டுள்ளனர். என்றும் தல அஜித் என்ற ஹேஷ்டேகை உருவாக்கி லட்சக் கணக்கில் ட்வீட் மற்றும் ரீ-ட்வீட் செய்து டிரெண்டிங்கில் இடம்பெற செய்து வருகின்றனர்.

விஜய்யின் பிறந்த நாள் என்றும் பாராமல் ரசிகர்கள் போட்டியை மட்டுமே கணக்கில் கொண்டு அஜித் ரசிகர்கள் செய்து வரும் இந்த செயலுக்கு விஜய் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version