கிரிக்கெட்

உலகக்கோப்பை வெற்றிக்கு சிஎஸ்கே ஒரு காரணம்: ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் பேட்டி!

Published

on

நேற்று நடைபெற்ற உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின என்பதும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிக அபாரமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கே வருமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் தற்போது கோப்பையை கைப்பற்றியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ஹேசில்வுட்டின் அபாரமான பந்து வீச்சு ஆகும். அவர் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் இதன் காரணமாகத்தான் நியூஸிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்து போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோப்பையை வென்ற பின் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் ஹேசில்வுட் பேட்டியளித்தபோது, ‘ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு சிஎஸ்கே உடனான அனுபவம் தனக்கு மிகவும் உதவி செய்ததாகவும் சிஎஸ்கே அணியில் பெற்ற அனுபவம் இறுதிப்போட்டியில் எங்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவியது என்றும் கூறியுள்ளார்.

எனவே ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு சிஎஸ்கேவும் ஒரு காரணம் என்று ஹேசில்வுட் கூறியிருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version