கிரிக்கெட்

IPLல் ஒரு போட்டி கூட சொந்த மைதானத்தில் இல்லை; சாதகமா, பாதகமா?- கோலி கருத்து

Published

on

ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் நாளை துவங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்ற ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கொரோனா தாக்கத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் முழுவதும் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமலேயே நடத்தப்பட உள்ளது.

மேலும் உள்ளூர் மற்றும் சொந்த மைதானத்தின் சாதகம் அணிகளுக்குக் கிடைத்து விடக் கூடாது என்னும் நோக்கில் ஐபிஎல் நிர்வாகம், இந்த முறை அனைத்துப் போட்டிகளையும் இரு அணிகளுக்கும் பழக்கமில்லாத இடங்களில் நடத்த அட்டவணை போட்டுள்ளது. இப்படி சொந்த மைதானங்களில் ஐபிஎல் அணிகள் விளையாடதது தொடரில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனுமான விராட் கோலி கூறுகையில், ‘உங்கள் சொந்த மைதானத்தில் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவதை விட ஒரு நல்ல உணர்வு இருக்க முடியாது தா். ஆனால், தற்போதைய விதிமுறைகளும் நல்லதுக்கே.

அனைத்து அணிகளும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத மைதானங்களில் தான் விளையாடப் போகின்றன. எனவே இந்த முறை அணியின் பலம் என்பது மிக முக்கியமானதாக இருக்கும். சென்ற ஐபிஎல் தொடர் கூட அந்த காரணத்தினால் தான் கடைசி வரை விறுவிறுக்காபவே சென்றது.

இப்படி போட்டிகள் நடத்தப்படுவது ஐபிஎல் தொடருக்கு நல்லது. ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version