சினிமா செய்திகள்
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்க போவது இவர்தானா?
சென்ற ஆண்டு சிறுத்தை சிவா ரஜினிகாந்த்தைச் சந்தித்துக் கதை கூறியுள்ளார். எனவே ரஜினியின் பேட்ட படத்தைத் தொடர்ந்து சிவா தான் ரஜினியை இயக்குவார் என்று செய்திகள் பரவியது.
ஆனால் ரஜினிகாந்த்தின் 167வது படத்தை இயக்கும் வாய்ப்பை ஏ ஆர் முருகதாஸ் பெற்றார். இந்நிலையில் லதா ரஜினிகாந்த்தின் பள்ளி விழா ஒன்றில் பங்கேற்ற சிறுத்தை சிவா, சென்ற வருடம் ரஜினியிடம் கூறிய கதையில் சிறு மாற்றங்களைச் செய்து மீண்டும் கூறியுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
மறுபக்கம் தர்பாரை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தையும் ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்குவார் என்றும், லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
எனவே விரைவில் தலைவர் 168 படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும், ஆனால் ஏ ஆர் முருகதாஸ், சிவா இருவரில் யார் இயக்குகின்றனர் என்பதுதான் உறுதி செய்யப்படாமல் உள்ளது.