இந்தியா

கோவிட்-19 தடுப்பு சோதனை மருந்தைப் போட்ட பிறகும் கொரோனா.. அதிர்ச்சியில் அமைச்சர்!

Published

on

கொரோனா சோதனை மருந்தைப் போட்ட பிறகும் இரண்டு வாரங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ஹரியான உள்துறை அமைச்சரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்திய பார்மா நிறுவனமான பாரத் பையோ டெக் நிறுவனம் தங்களது கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது.

இந்த மருந்தின் சோதனையில் தன்னை உட்படுத்திக்கொண்ட ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ்-க்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அம்பாலா கண்ட்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் சுய பரிசோதனைக்கு தங்களை உட்படுத்துக்கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என்று மோடி கூறிவந்த நிலையில், தற்போது வந்துள்ள இந்த செய்திகள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ்-க்கு நவம்பர் 20-ம் தேதி, சோதனையில் உள்ள கோவாஸின் கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டது.

பாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்ஸின் மருந்தின், 3-ம் கட்ட சோதனைக்குச் சென்ற ஆக்டோபார் மாதம் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அனுமதி அளித்தது. ஐசிஎம்ஆர் என அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து 26,000 தன்னார்வலர்களுக்கு, கோவாக்ஸின் மருந்து சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுக்கு எதிராக அதிகமானவர்களுக்குச் சோதனை அடிப்படியில் போடப்பட்டுள்ளது மருந்து இது என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version