சினிமா செய்திகள்

இஸ்பேட் ராஜாவாக வரும் ஹரிஷ் கல்யாண்

Published

on

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், தற்போது பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணாக பிரபலமடைந்துள்ளார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த பியார் ப்ரேமா காதல் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், தற்போது இவரது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

விஜய்சேதுபதியை வைத்து புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். நாயகியாக ஷில்பா மஞ்சுநாத் அறிமுகமாகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீசாகவுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version