சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைத் தொடர்ந்து உலக நாயகன் கமல் வேடத்தில் ஹரிஷ் கல்யாண்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைத் தொடர்ந்து உலக நாயகன் கமல் வேடத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஸ்டார் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் டிசம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட்டது. அதை கொண்டாடும் வகையில் நடிகர் ஷரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வெறித்தனமாக இருந்தது அந்த போஸ்டர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பழைய ரஜினிகாந்த்தின் ஹேர்ஸ்டைலோடு ஹரிஷ் கல்யாண் உள்ளார். அண்ணாமலை, பாட்ஷா இரண்டு திரைப்படங்களையும் கலந்தாற் போல், ஹரிஷ் கல்யாணின் தோற்றம் இருந்தது.

இந்நிலையில் இரண்டாம் லுக் போஸ்டரை இன்று ஸ்டார் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் தோற்றத்தில் ஹரிஷ் கல்யாண் உள்ளார். பார்க்க இது கமல் ஹாசன் தான் என்று நம்பு அளவிற்கும் உள்ளது.

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தில் மீண்டும் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது ஒரு வெற்றிக் கூட்டணி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் அந்த போஸ்டரை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

Trending

Exit mobile version