சினிமா

மீண்டும் இணைந்த ’ப்யார் ப்ரேமா காதல்’ கூட்டணி..!

Published

on

’ப்யார் ப்ரேமா காதல்’ என்னும் வெற்றிப்படத்தை அளித்த யுவன் சங்கர் ராஜா- ஹரிஷ் கல்யாண்- எலன் கூட்டணி தற்போது புதிய படத்துக்காக இணைந்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற படம் ’ப்யார் ப்ரேமா காதல்’. இத்திரைப்படக் கூட்டணி தற்போது புதிய படத்துக்காக இணைந்துள்ளனர். இப்படத்தை எலன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நாளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி ஹே படக்குழுவினர் சிறப்பு அப்டேட் ஒன்றையும் வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

படக்குழு #HEY என்னு ஹாஷ்டேக்கை வைரல் செய்து வருகின்றனர். நாளை இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. நடிகர் ரஜினியைக் கொண்ட இத்திரைப்படத்தின் தலைப்பு அமைந்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version