தமிழ்நாடு
ஆலங்குளம் தொகுதியில் இரண்டாமிடத்தில் ஹரிநாடார்: வெற்றி பெறவும் வாய்ப்பு என தகவல்!
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான தொகுதியில் திமுக வெற்றி பெற்று உள்ளது.
இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட நடமாடும் நகைக்கடை என்று கூறப்படும் ஹரிநாடார் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் முதல் இடத்தில் வந்து வெற்றி பெறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 16,989 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஹரிநாடார் 16 ஆயிரத்து 825 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 200க்கும் குறைவான வார்த்தைகளில் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் அந்த தொகுதியில் ஹரிநாடார் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மேலும் இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 16591 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சற்று நேரத்தில் இந்த தொகுதியின் வெற்றி நிலவரம் அறிவிக்கப்படும் நிலையில் ஹரிநாடார் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.