தமிழ்நாடு

நடமாடும் நகைக்கடை ஹரிநாடாரை பார்த்து ஆச்சரியம் அடைந்த ராகுல்காந்தி!

Published

on

நடமாடும் நகைக்கடை என்று கூறப்படும் ஹரி நாடார் அவர்கள் சமீபத்தில் ’2k அழகானது காதல்’ என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் சுரண்டையில் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது அவர் அந்த பகுதி மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறினார்

ஆங்கிலம் இந்தி தமிழ் என மூன்று மொழிகளிலும் மாறி மாறி ஹரிநாடார் பேசியதை ஆர்வத்துடன் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி ஹரிநாடார் சுமார் 4 கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டிருப்பதையும் ராகுல் காந்தி மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்ததாக கூறப்படுகிறது. ஹரிநாடார் ராகுல் காந்தியை சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version