தமிழ்நாடு
தேர்தலில் போட்டியிடுகிறார் ஹரி நாடார்; 11,200 கிராம் தங்கம் இருப்பதாக அறிவிப்பு!
கோல்ட்மேன் என்று கூறப்படும் ஹரிநாடார் நடமாடும் தங்க நகை கடையாக வலம் வந்து கொண்டிருப்பார் என்பது தெரிந்ததே அவர் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தார் என்பதும் இந்த திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஹரிநாடார் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து, அதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது சுமார் 4.27 கிலோ தங்க நகைகளை அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது வேட்பு மனுவில் அவர் தன்னிடம் 11,200 கிராம் தங்க நகை இருப்பதாகவும் அவற்றின் மதிப்பு சுமார் 4.7 கோடி என்றும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கையில் மட்டும் கழுத்தில் தங்க நகைகள் நிரம்பிய போஸில் ஹரிநாடார் வேட்புமனுவை தாக்கல் செய்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.