இந்தியா

ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ.5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூபாய் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கை கடிகாரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு நாடுகளில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது என்பதும் இதில் இந்திய அணியினரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணியினர் தற்போது நாடு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வந்தார். அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது 5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அந்த இரண்டு கைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மரகத கற்கள் மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த கைக்கடிகாரங்களுக்கு ஹர்திக் பாண்டியா போதிய ஆவணங்கள் வைத்திருக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து அந்த இரண்டு கைக்கடிகாரங்களையும் பறிமுதல் செய்த துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரூபாய் 5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக்கிடம் இருந்து கைப்பற்றியுள்ளது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version