கிரிக்கெட்

பாகிஸ்தான் வீரரை முள்கரண்டியால் குத்தச் சென்ற ஹர்பஜன் சிங்!

Published

on

தற்போது இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டித்தொடரில் தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் நடந்த சுவார்ஸ்யமான ஒரு சம்பவத்தை தற்போது பகிர்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்.

2003 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டி நாளன்று மதியம் சாப்பிடுவதற்காக நான், ஸ்ரீநாத், கும்ப்ளே, ராகுல் டிராவிட் உள்ளிட்ட அனைவரும் சென்றோம். அப்போது மேஜையின் எதிரே பாகிஸ்தான் வீரர்கள் முகமது யூசுப், ஷோயிப் அக்தர், சயித் அன்வர், வாசிம் அக்ரம் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அப்போது எதிரே அமர்ந்திருந்த அக்தரும், முகமது யூசுப்பும் பஞ்சாபி மொழியில் பேசினார்கள். எனக்கு பஞ்சாபி தெரியும் என்பதால் அவர்கள் பேசியது புரிந்தது. அவர்களில் முகமது யூசப் முதலில் என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். பின்னர் என் மதத்தைப் பற்றி விமர்சித்தார்.

இதனால் கடும் ஆத்திமரமடைந்த நான் யூசுப்பின் காலைப் பிடித்து இழுத்தேன். அவரும் என் காலைப் பிடித்து இழுத்ததார். பின்னர் மேஜையில் இருந்த முள்கரண்டியை கையில் எடுத்து முகமது யூசுப்பை நோக்கி நகர்ந்தேன். அவரும் முள்கரண்டியை எடுத்து என்னை நோக்கி வந்தார். இதனால் அந்த இடம் பெரும் பதற்றமடைந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் எங்களை விலக்கினர்.

டிராவிட்டும், ஸ்ரீநாத்தும் என்னை அமைதியாக்கி அமர வைத்து யூசுப்பை எச்சரித்தனர். நானும், யூசுப்பும் சமீபத்தில் சந்தித்த போது இந்த சம்பவத்தை குறித்து பேசி சிரித்தோம் என கூறி தனது பழைய நினைவலைகளை பகிர்ந்துகொண்டார் ஹர்பஜன் சிங்.

seithichurul

Trending

Exit mobile version