தமிழ்நாடு

அரியர் மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

Published

on

அரியர் மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி என்று தமிழகத்தின் இரண்டு முக்கிய பலகலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

கோவிட்-19 ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு போன்று, இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை தவிரப் பிற தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதில் அரியர் தேர்வுகளும் உள்ளடங்கும் என்று தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் அரியர் மாணவர்கள் தேர்வு எழுதாமல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டால் பலகலைக்கழகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏஐசிடிஇ தெரிவித்தது.

மேலும் நீதிமன்றத்திலும் அரியர் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டு, பாஸ் என்று அறிவிக்க முடியாது என்று யுஜிசி திட்டவட்டமாகச் சென்ன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே பொறியியல் கல்லூரி மாணவர்கள் அரியர் வைத்து இருந்தால் கண்டிப்பாகத் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கலைக் கல்லூரி மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக, மதுரை காமராஜர் பலகலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகங்கள் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தி இருந்தால் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துள்ளன.

எனவே மாணவர்கள் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், எங்கு அண்ணா பல்கலைக்கழகம் போல இந்த அறிவிப்பும் இழுபறியில் சென்று விடுமோ என்று அஞ்சுகின்றனர்.

Trending

Exit mobile version