சினிமா செய்திகள்

HBD விஷால்: வாழ்த்துக்களை குவிக்கும் திரையுலகினர்

Published

on

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு ’செல்லமே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால், அதன் பின்னர் அவருக்கு சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி உள்பட பல திரைப்படங்கள் வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் ஆனந்த் ஷங்கர் இயக்கிவரும் ’எனிமி’ அவரே இயக்கி வரும் ’துப்பறிவாளன் 2’ மற்றும் சரவணன் இயக்கி வரும் ’விஷால் 31’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஷால் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் 2017 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பல்வேறு அவதாரங்களில் தனது முத்திரையை பதித்து உள்ள விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நடிகர் விஷால் இன்னும் பல வெற்றிகளை குவித்து திரையுலகில் சாதனை செய்ய வேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்.

seithichurul

Trending

Exit mobile version