சினிமா செய்திகள்

ஹேப்பி பர்த்டே ஆர்.ஜே.பாலாஜி!

Published

on

நடிகராக ஆனாலும், தனது பெயருடன் ஆர்.ஜே. அடைமொழியை கொண்டு செல்லும் பழசை மறக்காத ஆர்.ஜே. பாலாஜியின் 34வது பிறந்த நாள் இன்று.

ரேடியோவில் ஆர்.ஜே.வாக பணியாற்றியபோது, இவர் செய்த பிரான்க் கால் ஷோ மாபெரும் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து படங்களில் காமெடியானாக நடிக்க ஆரம்பித்த ஆர்.ஜே. பாலாஜி, எல்.கே.ஜி படத்தின் மூலம் கதாநாயகனாகவும் மாறியுள்ளார்.

கிரிக்கெட் கமெண்ட்ரிகளையும் விடாது செய்து வரும் ஆர்.ஜே. பாலாஜி, சமூக சிந்தனை கருத்துக்களை சமூக வெளியில் முன் வைப்பதையும் மறக்காமல் செய்து வருகிறார்.

சமீபத்தில் காமெடியனாக இவர் நடித்து வெளியான தேவி 2 படுதோல்வியை சந்தித்தாலும், இறுதியில் 15 நிமிடம் இவர் வரும் காட்சிகள் ரசிகர்களை மகிழ்வித்தது என்றே பலரும் பாராட்டினார்கள்.

எல்.கே.ஜி போன்று மேலும், பல வெற்றிப் படங்களையும், நல்ல கருத்துள்ள நகைச்சுவைகளையும் மக்கள் மனதில் இந்த கலைஞன் வெகுகாலம் விதைக்க வாழ்த்துகள்!

Trending

Exit mobile version