தமிழ்நாடு

இன்று ரஜினியின் பிறந்தநாள்! ரசிகர்கள், நிர்வாகிகளின் அலப்பறைகள்!!

Published

on

இன்று (டிசம்பர் 12) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பட்டையைக் கிளப்பி கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இப்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து விட்டார். எனவே, ரஜினியின் இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் கேட்கவா வேண்டும்.

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ரஜினியின் வீட்டிற்கு முன்பு அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இதே போல் பல மெயின் ரோடுகளில், புத்தாண்டு கொண்டாடுவது போல் கேக் வெட்டி கரகோஷத்துடன் கொண்டாடினர்.

திருப்பூரில் ரஜினியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளையும், அரசியல் பிரவேசத்தையும் கொண்டாடும் வகையில் டி-சர்டை தயாரித்துள்ளனர். அந்த டி-சர்ட்டில் ரஜினியின் அரசியல் பஞ்ச் வசனங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.

‘மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்’, ‘அதிசயம் அற்புதம்’,’ஆன்மீக அரசியல்’,’இப்போ இல்லைனா எப்பவும் இல்லை’ என ரஜினியின் பஞ்ச் டயலாக் அனைத்தையும் டிசர்டில் அச்சிட்டுள்ளனர்.

இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் ரஜினியின் ரசிகர் பட்டாளங்கள் அவரது பிறந்தநாளைக் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். பன்னெடுங்காலமாக நீடித்து வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் நிறைவேறி விட்ட நிலையில், நேற்று அவரது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால், ரஜினி தரப்பில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

author avatar
seithichurul

Trending

Exit mobile version