சினிமா செய்திகள்

ஹேப்பி பர்த்டே காஜல் அகர்வால்!

Published

on

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வாலின் 34வது பிறந்த தினம் இன்று அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கிலும் ஹேப்பி பர்த்டே காஜல் அகர்வால் என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது.

விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வால், கமலுடன் இந்தியன் 2 படத்தில் முதன்முறையாக இணைந்தார். ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குமா? துவங்காதா? என்ற அப்செட்டில் இதுவரை உள்ளார்.

நயன்தாராவை போல பல நாயகிகளும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்து முடித்த காஜல், அந்த படமும் இதுவரை வெளியாகவில்லை என பொறுமையிழந்து காத்துக் கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் நடிக்கக்கூடாது என தனது முதல் காதலன் கூறியதால், அவரை பிரேக் செய்த எக்ஸ்க்ளூசிவ் தகவலையும் பகிர்ந்துள்ளார்.

இந்த ஆண்டு காஜல் அகர்வாலுக்கு வெற்றியாண்டாக அமைய வாழ்த்துகள்!

seithichurul

Trending

Exit mobile version