சினிமா செய்திகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் பாரதிராஜா!

Published

on

தமிழ் திரையுலகின் புரட்சிகரமான இயக்குனராகிய இயக்குனர் இமயம் பாரதிராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாமும் பாரதிராஜா அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

கடந்த 1977ஆம் ஆண்டு ’16 வயதினிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. முழுக்க முழுக்க கிராமத்தில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்று கூறும் அளவுக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே கிராமத்தில் நடந்தது என்பதும் இதில் நடித்த நடிகர்களும் மிக இயல்பாக நடித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகிய மூவரின் நடிப்பில் மிகச்சிறந்த வகையில் இருந்தது என்பது தெரிந்ததே. தமிழக அரசின் சிறந்த இயக்குனர் என்ற விருது பாரதிராஜாவுக்கு இந்த படம் பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக் உள்பட பல திரைப்படங்களை இயக்குனர் பாரதிராஜா இயக்கினார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ‘அன்னக்கொடி’ என்ற திரைப்படத்திற்கு பின் பாரதிராஜா படங்கள் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாரதிராஜா திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் நடிப்பிலும் பாரதிராஜா அசத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பாரதிராஜாவின் திரைப்படங்கள் பல தேசிய விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்மரியாதை, வேதம்புதிது, கருத்தம்மா, கடல் பூக்கள் ஆகிய திரைப்படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிலிம்பேர் விருதுகள், தமிழக அரசின் விருதுகள், நந்தி விருதுகள், விஜய் விருதுகள் என பாரதிராஜா பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version