இந்தியா

அனுமான் ஒரு தலித்.. ஆகவே மக்களே!.. ஆதித்யநாத் பரபர!

Published

on

ஜெய்ப்பூர்: அனுமான் ஒரு தலித், அதனால் தலித் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தியா முழுக்க  ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. ராஜஸ்தானில் வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ராஜஸ்தான் தேர்தலுக்காக பாஜக தற்போது தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தலுக்காக உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஜாதி குறித்து பேசினார்

ராஜஸ்தானில் பிரச்சாரம் செய்வதற்காக யோகி ஆதித்யநாத் களமிறங்கி உள்ளார். அவர் செய்யும் பிரச்சாரத்தில் முழுக்க முழுக்க ராமர் குறித்து ராமாயணம் குறித்தும்தான் பேசி வருகிறார். எப்போதும் மதம் பற்றி பேசும் இவர் இந்த முறை ஜாதி குறித்து அதிகமாக பேசினார்.

அவர் தனது பிரச்சாரத்தில், அனுமான் ஒரு தலித். அவர்  பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அவர் இந்தியா முழுக்க இணைந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ராமரின் ஆசையும் அதுதான். தெற்கும் வடக்கும், மேற்கும் கிழக்கும் இணைந்து இருக்க ஆசைப்பட்டார். அதை நாம் நிறைவேற்ற வேண்டும். பாஜக அதை நிறைவேற்றும்.

seithichurul

Trending

Exit mobile version