தமிழ்நாடு

அரையாண்டு தேர்வு விடுமுறை பாதியாக குறைக்கப்பட்டதா?

Published

on

அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐந்து நாட்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதால் அரையாண்டு தேர்வு விடுமுறை பாதியாகக் குறைக்கப்பட்டதா? என்ற தகவல் தற்போது பரபரப்பாக பரவி வருகிறது.

தமிழகத்தில் பள்ளிகள் கால தாமதமாக தொடங்கியதாலும், கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டதாலும் இந்த முறை அரையாண்டு தேர்வு விடுமுறை இருக்காது என்று கூறப்பட்டது. ஆனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்த போது அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்கள் அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே என்று அறிவித்துள்ளது. இதனால் அரையாண்டு தேர்வு விடுமுறை பாதியாகக் குறைக்கப்பட்டது என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் கிறிஸ்துமஸ் மற்றும் சனி ஞாயிறு விடுமுறை என்பதும் அதேபோல் ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்கள் புத்தாண்டு மற்றும் சனி ஞாயிறு விடுமுறை என்பதாலும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை விடுமுறை என்பது உறுதியாகி உள்ளது என்பதும் எனவே அரையாண்டு தேர்வு விடுமுறை மொத்தம் ஒன்பது நாட்கள் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version