தமிழ்நாடு

இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை உண்டா? பள்ளிக்கல்வித்துறை

Published

on

பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை விடப்படாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது

இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு என்பது மிகவும் காலதாமதமாக தொடங்கப்பட்டது. குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து சற்று தாமதமாக எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்டன

இந்த நிலையில் தொடர் மழை காரணமாகவும் பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை கூட நடத்தி முடிக்க முடியாத நிலைதான் தற்போது அனைத்து பள்ளிகளிலும் இருக்கிறது

எனவே இந்த பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டியதன் காரணமாகவும் ஏற்கனவே இந்த ஆண்டு, காலாண்டு அரையாண்டு தேர்வு நடத்தப்படாததன் காரணமாக அரையாண்டு தேர்வு விடுமுறையை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது

வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக அரையாண்டு தேர்வு விடுமுறை என்பது தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். ஆனால் இந்த ஆண்டு அது போன்று விடுமுறை எதுவும் இருக்காது என்றும், பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Trending

Exit mobile version