இந்தியா

இந்தியாவில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பில் 53% இந்த இரு மாநிலங்களில்தான்!

Published

on

கடந்த வாரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பில் பாதிக்கும் மேல் கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டவை தான் என்று இந்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.

‘இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இன்னுமும் முழுமையாக முற்றுப் பெறவில்லை. நாம் இன்னும் இரண்டாவது அலையில் இருந்து மீள போராடி வருகிறோம்.

குறிப்பாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்காமல் அவர்கள் சுற்றித் திரிவது மூன்றாவது அலைக்கு வித்திட்டு விடும். இது குறித்து மாநில அரசுகள் மிகவும் கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றி நடப்பது உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை கடைபிடிப்பதில் மக்களிடம் எந்த வித சுணக்கமும் இருக்கக் கூடாது’ என்று ஒன்றிய சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இன்னும் ஒரு சில மாதத்தில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

Trending

Exit mobile version