உலகம்

கூகுள் ட்ரான்ஸ்லேட்டை பயன்படுத்தி ஹேக்கிங்? வங்கி கணக்கில் நூதன திருட்டு..!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக ஹேக்கர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு அப்பாவிகளின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடி செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சைபர் கிரைம் அதிகாரிகளாலேயே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு புதுப்புது டெக்னிக் மூலம் அவர்கள் மோசடி செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை பயன்படுத்தி ஹேக்கர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுகிறார்கள் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் ட்ரான்ஸ்லேட் இணைய இணைப்புகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் சிலருடைய தனிப்பட்ட தகவல்களை தேடி வருவதாகவும் அதன் மூலம் அவர்களுடைய வங்கி கணக்கு மோசடி செய்வதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் Barracuda Networks என்ற நிறுவனம் பிஷ்ஷிங் தாக்குதல் குறித்து ஆய்வு செய்தபோது ஹேக்கர்கள் சில புதிய உத்திகளை கையாண்டு வருவதை கண்டுபிடித்தனர்.

சைபர் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தவிர்க்கவும் தங்கள் முயற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர். உலகில் பலர் பயன்படுத்தும் செயலியாக கூகுள் டிரான்ஸ்லேட் இருந்து வருகிறது என்பதும் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு அர்த்தம் தேவை என்றால் கிட்டதட்ட அனைவருமே அதைத்தான் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கூகுள் ட்ரான்ஸ்லேட் சேவையை பயன்படுத்தும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு ஹேக்கர்கள் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அந்த மின்னஞ்சலில் ஒரு ஃபிஷ்ஷிங் லிங்கை அனுப்பி போலியாக உருவாக்கப்பட்ட பக்கங்களின் லிங்க்கை அனுப்புகின்றனர் அந்த பக்கத்தின் மூலம் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் போலவே ட்ரான்ஸ்லேட் செய்யலாம் என மெசேஜ் அனுப்பப்படுகிறது. இந்த இணையதளத்தை உண்மை என நம்பி அதை பயன்படுத்த அந்த லிங்கை கிளிக் செய்தால் உடனடியாக அவர்களுடைய கம்ப்யூட்டர் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும் என்பதும் அதன் பிறகு அவர்கள் வெகு எளிதாக அவர்களை வங்கி கணக்கை தெரிந்து கொண்டு மோசடி செய்வதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக மின்னஞ்சல் உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் மோசடி செய்து வருவதை ஹேக்கர்கள் வழக்கமாக்கி வருகின்றனர். மேலும் ஹேக்கர்களே சிலசமயம் கூகுள் டிரான்ஸ்லேட்டை பயன்படுத்தி அப்பாவிகளின் மொழிகளில் மெசேஜ் அனுப்பி வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் Barracuda Networks ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து தங்கள் அறிக்கையில் வெளியிட்ட போது ’பிஷ்ஷிங் மின்னஞ்சல்கள் கூகுள் டிரான்ஸ்லேட் போலவே வரலாம் என்றும் இந்த தந்திரங்களை பயன்படுத்தி தற்போது மோசடி செய்வது அதிகரித்து வருவதாகவும் எனவே கூகுள் ட்ரான்ஸ்லேட்டை பயன்படுத்துபவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version