உலகம்

அரசு தொலைக்காட்சி, பாதுகாப்பு இணையதளங்கள் ஹேக்: ரஷ்யாவுக்கு எதிரான ஹேக்கர்களின் நடவடிக்கை!

Published

on

ஐநாவே கட்டுப்படுத்த முடியாத ரஷ்யாவை கட்டுப்படுத்திய ஹேக்கர்கள்: எப்படி தெரியுமா?

உக்ரைன் நாட்டின் மீது போர் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி, பாதுகாப்பு இணையதளங்கள் ஆகியவற்றை ஹேக்கர்கள் ஹேக் செய்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியான ஆர் டி நியூஸ், ரஷ்ய அரசின் வலைதளங்கள், பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் ஆகியவைகளை ஹேக்கர்கள் திடீரென ஹேக் செய்திருப்பதாகவும் இந்த காரணமாக ரஷ்ய அரசு அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன .

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக வலைதளத்திலிருந்து தகவல்களை எடுத்து இணையதளங்களில் தாங்கள் கசியவிட்டு உள்ளதாகவும் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்தாவிட்டால் இன்னும் பல அரசுக்கு சொந்தமான இணையதளங்களை ஹேக் செய்து அதில் உள்ள ரகசியங்களை இணையதளத்தில் பரப்பி விடுவோம் என ஹேக்கர்கள் அறிவித்துள்ளதால் ரஷ்யா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதன் காரணமாகத்தான் நேற்று ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் சமாதானம் பேச தயார் என அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. பொதுவாக ஹேக்கர்களின் செயல்கள் கடுமையாக கண்டிக்க பட்டு வரும் நிலையில் தற்போது இந்த போரை நிறுத்த ஹேக்கர்கள் செய்த செயலை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் ஐநாவே கட்டுப்படுத்த முடியாத ரஷ்யாவை ஹேக்கர்கள் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version