தமிழ்நாடு

கட்சி கேட்டுக்கொண்டால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன்: எச்.ராஜா அறிவிப்பு!

Published

on

கட்சி கேட்டுக்கொண்டால் வர உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட தயார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலை பாஜக, அதிமுக, பாமக கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்திக்க உள்ளது. இந்த கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக வரவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணியில் பாஜகவுக்கு அதிமுக 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிட உள்ளதாக சில நாட்களாக தகவல்கள் வருகின்றன.

ஆனால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு இந்த தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் புதுக்கோட்டை திருமயத்தில் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கட்சி கேட்டுக்கொண்டால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன். நான் என்றும் சீட் கேட்டது கிடையாது என்றார்.

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மேடை அமைத்து தர திமுக தயாராக இல்லை, தோழமை கட்சிகள் தான் அமைத்து தர வேண்டும். தேமுதிக உடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என்றார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

seithichurul

Trending

Exit mobile version