தமிழ்நாடு

அமைச்சர் நிர்மலாவுடன் நேர்காணல்; கார்த்திகைசெல்வனை ‘அறிவாலய அடிமை’ என விமர்சித்த எச்.ராஜா

Published

on

புதிய தலைமுறை தனியார் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராக இருக்கும் கார்த்திகைசெல்வனை, ‘அறிவாலய அடிமை’ என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எச்.ராஜா.

சில நாட்களுக்கு முன்னர் கார்த்திகைசெல்வன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சிறப்பு நேர்காணலில் ஈடுபட்டார். அந்த நேர்காணலில் பல விமர்சனப் பூர்வ கேள்விகளை அமைச்சர் நிர்மலாவுக்கு வைத்தார் கார்த்திகைசெல்வன். இதில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த அமைச்சர் நிர்மலா, ‘மீண்டும் மீண்டும் ஒரு அஜெண்டாவை மனதில் வைத்துக் கொண்டு இப்படி கேள்வி கேட்பது போல தெரிகிறது’ எனக் குற்றம் சாட்டுகிறார்.

இந்த உரையாடல் வரும் குறுகிய நேர வீடியோவை மட்டும் வெட்டி எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள எச்.ராஜா, ‘கார்த்திகை செல்வன் தெரியாமல் இவ்வாறு கேட்பதில்லை. அறிவாலய அடிமைகளின் வெளிப்பாடு இது’ என சர்ச்சையான வகையில் விமர்சித்து உள்ளார்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளிலும் நேர்காணல்களிலும் விமர்சனங்கள் அதிகமுள்ள கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள் நிருபர்கள்.

 

Trending

Exit mobile version