சினிமா
நல்ல கதையா திருடுங்கடா: சர்கார் படத்தை கிண்டலடிக்கும் எச்.ராஜா!
நடிகர் விஜய் நடித்து நேற்று வெளியான சர்கார் படம் குறித்து கிண்டலடிக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் முன்னதாக நடித்த மெர்சல் படத்தை பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவும், தமிழிசையும் கடுமையாக விமர்சித்தார்கள். இதனையடுத்து அந்த படம் பெரிய வெற்றியை அடைந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள சர்கார் படத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழிசை.
கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டு பற்றி படம் எடுத்திருக்கிறார்கள். சினிமாவில் விஜய் நேர்மையாக இருக்க வேண்டும். இது கார்ப்பரேட்களுக்கான ஆட்சி இல்லை. காமன்மேன்களுக்கான ஆட்சி. முதல்வர் கனவோடு நடிக்கிறவர்கள் திரையில்தான் ஆட்சி செய்ய முடியும். சினிமாவில்தான் சர்கார் அமைக்க முடியும்; நிஜத்தில் முடியாது என்றார் தமிழிசை.
இந்நிலையில் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா என்று பதிவிட்டுள்ளார்.
சர்கார் திரைப்படம் முன்னதாக கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியதால் தமிழிசையும், எச்.ராஜாவும் சர்கார் திரைப்படத்தை தான் விமர்சிக்கிறார்கள் என பேசப்படுகிறது.