தமிழ்நாடு

அரசியலை பொருத்தவரை ரஜினியும் சசிகலாவும் ஒன்று: எச்.ராஜா

Published

on

அரசியலைப் பொருத்தவரை சசிகலாவும் ரஜினியும் ஒன்றுதான் என சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக பிரமுகர் எச் ராஜா தெரிவித்துள்ளார்

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலையான நிலையில் அவர் வரும் 7ஆம் தேதி தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்றும் அதிமுகவை அவர் கைப்பற்றுவார் என்றும் அதிமுகவில் உள்ள பெரும்பாலானவர்கள் அவருக்கு ஆதரவாளர்களாக மாறுவார்கள் என்றும் ஊடகங்களில் கூறப்பட்டு வருகின்றது

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பாஜக பிரமுகர் எச்.ராஜா, ‘சசிகலா சென்னை வந்து அவரது வாயாலேயே அவரது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்த பின்னர் தான் எதுவும் கூற முடியும். அவர் இதுவரை அரசியல் நிலைப்பாடு குறித்து எதுவும் கூறாத நிலையில் எந்த ஒரு கருத்தையும் என்னால் தெரிவிக்க முடியாது என்று கூறினார்

இதேபோல்தான் ரஜினி அரசியலுக்கு வருவார் என பல ஆண்டுகாலமாக ஊடகங்களாகிய நீங்கள் கூறினீர்கள். ஆனால் அவர் கடைசியாக அரசியலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டார். அதேபோல் ஊடகங்களாகிய நீங்கள் தான் சசிகலா குறித்தும் அதிக எதிர்பார்ப்புடன் கருத்துக்களை தெரிவித்து வருகிறீர்கள் என்று எச் ராஜா தெரிவித்துள்ளார்

எனவே அரசியல் பொருத்தவரை ரஜினியின் சசிகலாவும் ஒன்று என்றும் சசிகலாவே தனது வாயால் அரசியல் குறித்த நிலைப்பாட்டை தெரிவித்தபின்னர் தான் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும் எச். ராஜா தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version