சினிமா செய்திகள்

ஜோதிகாவை வம்புக்கிழுக்கிறதா ‘நிலை மறந்தவன்; திரைப்படம்: எச்.ராஜா விளக்கம்

Published

on

‘நிலை மறந்தவன் என்ற திரைப் படத்தில் ஜோதிகாவின் கேரக்டரை வைத்து ஜோதிகாவை வம்புக்கு இழுப்பதாக கூறப்பட்டதற்கு எச். ராஜா விளக்கம் அளித்துள்ளார் .

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’டிரான்ஸ்’. பகத் பாசில் நடித்த இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘நிலை மறந்தவன்’. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் எச் ராஜா, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசியபோது மதமாற்றம் செய்யும்ன் கும்பலை கண்டிக்கும் விதமாக தான் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த படம் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானது கிடையாது என்றும் மதமாற்றத்தை முழுநேர தொழிலாக செய்பவர்களுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் இந்த படத்தில் மோகன், தினகரன், ஜோதிகா, சற்குணம் உள்ளிட்ட கேரக்டரில் வேண்டும் என்றே இடம்பெற்று வம்புக்கு இழுக்கும் வகையில் உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, ‘ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னிகுண்டம் காலண்டர் எப்படி ஒரு குறியீடாக பார்க்கப்பட்டதோ அதே போல் தான் இந்த படத்தில் உள்ள கேரக்டர்களும் குறியீடு தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படம் தமிழகத்தில் வெளிவந்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version