தமிழ்நாடு

நடிகர் சூர்யா வன்முறையை தூண்டுகிறார்: எச்.ராஜா கடும் கண்டனம்!

Published

on

பிரபல நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து பேசினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சூர்யா வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டது. அதில் நாடுமுழுவதும் மும்மொழிக்கொள்கை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து மத்திய அரசு இதில் திருத்தம் கொண்டுவந்து, இந்தி கட்டாயமல்ல, அவரவர் விருப்பம் போல படிக்கலாம் என அறிவித்தது.

இந்நிலையில் அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக ஆவேசமாக பேசினார். நீட்டுக்கு எதிராகவும், கல்விமுறைக்கு எதிராகவும் சூர்யா பேசியது பலரை ஈர்த்துள்ளது. பலரும் அதுபற்றி பேச ஆரம்பித்துள்ளார்கள். இதனால் நடிகர் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தவாறு உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரை உசிலம்பட்டியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, புதிய தேசியக் கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version