சினிமா

இவரு மட்டும் 5 மொழியில படம் எடுப்பாராம்!.. சூர்யாவை சீண்டிய ஹெச்.ராஜா….

Published

on

மத்தியில் பாஜக அரசு ஆட்சியை பிடித்தது முதலே தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. சில இடங்களில் ஹிந்தியில் ஊர் பெயர் எழுதப்பட்டது. சில தெரு பெயர்கள் கூட ஹிந்தியில் எழுதப்பட்டது. அதேபோல், வட மாநிலத்தவர் பலரும் இங்கு மத்திய அரசு பணியில் சேர்க்கப்பட்டனர்.

அதேபோல், புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில், அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது. இதை தமிழ் பற்றாளர்கள் பலரும் எதிர்த்தனர். இது சமூக வலைத்தளங்களில் கடுமையாக எதிரொலித்தது. நடிகர் சூர்யாவும் இதை எதிர்த்து கருத்து தெரிவித்தார். எனவே, பாஜகவினர் அவரை கடுமையாக விமர்சித்தனர். தற்போது அவரின் ஜெய்பீம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தேசிய பாஜக செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம்’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள் ‘விருப்பத்திற்கு ஏற்ப அவனவன் மொழியில படம் பார்க்கத்தான் 6 மொழியில் ரிலீஸ்.. தமிழ்நாட்டுகாரன் ஹிந்தி படத்தை கட்டாயம் பார்க்கனும்னு சொல்றதுதான் உங்க மொழி திணிப்பு..இது புரிஞ்சு இருந்தா நீங்க அட்லீஸ்ட் ஒரு வார்டு கவுன்சிலர் ஆகி இருக்கலாம்’ என கிண்டலாக அவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

Trending

Exit mobile version