தமிழ்நாடு

கேள்வி கேட்பவர்கள் ஆன்டி இந்தியன்ஸ் தான்: எச்.ராஜா சர்ச்சை கருத்து!

Published

on

பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜா சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதில் வல்லவர். ஆண்டி இந்தியன்ஸ் என்ற வார்த்தையை கேட்ட உடனே நியாபகத்துக்கு வருபவர் எச்.ராஜா தான். இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகித்திருக்கிறார் அவர்.

எச்.ராஜா தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் சிவகங்கை மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அவர் சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதை தவிர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ஆன்டி இந்தியன்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் அதுதான் இல்லை, அவர் அப்படியேத்தான் இருக்கிறார்.

பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த எச்.ராஜாவிடம், கேள்வி கேட்பவர்களை ஆன்டி இந்தியன்ஸ் என்று சொல்கிறீர்கள் மற்றும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த எச்.ராஜா, நாட்டை வெட்டிப் பிளப்பேன் என்பவர்கள், தமிழ்நாடு இந்தியாவின் அண்டை நாடு என்பவர்கள் ஆன்டி இந்தியன்தான்.

பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா புகுந்து பின்லேடனை கொன்றபோது, அமெரிக்கர்கள் யாரும் பின்லேடனின் உடல் எங்கே என கேட்கவில்லை. ஆனால், புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தினால், இறந்துபோன பாகிஸ்தான் வீரர்களின் உடலைக் காட்ட வேண்டுமெனக் கேட்கிறார்கள் சிலர். இப்படி ராணுவத்தை கேள்வி கேட்பது தேச விரோதமில்லையா, அவர்கள் ஆன்டி இந்தியன்தானே என பதிலளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version