தமிழ்நாடு

வைரமுத்து, சின்மயி விவகாரம்: மூக்கை நுழைக்கும் எச்.ராஜா!

Published

on

பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் வேறு சிலரும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வைரமுத்து, அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது என மறுப்பு தெரிவித்ததோடு இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். வைரமுத்து விவகாரத்தில் முன்னதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை அவரை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய அமைச்சராக இருந்த எம்.ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, புகார் சொன்னவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அதே போல் வைரமுத்து அவர்களும், அவருக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப கொடுத்துவிட்டு, வழக்கு தொடர்வது தான் சிறந்தது என தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version