சினிமா செய்திகள்

’பிகில்’ நாயகி உடன் ஜி.வி.பிரகாஷ்… சன் டிவி-யில் நேரடி வெளியீட்டுக்குப் படம் தயார்..!

Published

on

நடிகர் ஜிவி பிரகாஷ் ‘பிகில்’ நாயகி உடன் ஜோடி சேர்ந்துள்ள படம் நேரடியாக டிவி வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

நடிகர் ஜிவி பிரகாஷ் புதிய படம் ஒன்றை நிறைவு செய்துள்ளாராம். இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இரண்டாவது முறையாக கடவுள் இருக்கான் குமாரு படத்தை இயக்கிய ராஜேஷ் உடன் கூட்டணி அமைத்துள்ளார். நாயகி ஆக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இவர்களுடன் டேனி, ஆனந்த்ராஜ், பிக்பாஸ் ரேஷ்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்தப் படம் நேரடியாக டிவி-யில் வெளியாக உள்ளது.

நடிகர் விக்ரம் பிரபுவின் புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் டிவி-யில் வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இதேபோல், ஜிவி பிரகாஷ் படமும் நேரடியாக சன் டிவி-யில் வெளியாக உள்ளது. சன் டிவி-யில் ஏப்ரல் 14-ம் தேதியை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி ஐங்கரன், ஜெயில், பேச்சிலர், அடங்காதே ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version