சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன் டிரைலர் ரிலீஸ்!

Published

on

ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஈட்டி படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவி அரசு, அந்த படம் திரைக்கு வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அவரது இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஐங்கரன் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக மஹிமா நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசையும் அமைத்துள்ளார்.

பல படங்களில் பல வேடங்களில் நடித்த ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தில் பொறியாளராக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Trending

Exit mobile version