சினிமா செய்திகள்

ஜிவி பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Published

on

ஜிவி பிரகாஷ் நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டில் ’வணக்கம்டா மாப்ள’ என்று இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

சன்டிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த இரண்டு போஸ்டர்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவி பிரகாஷ் ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கும் இந்த படத்தில் டேனியல் போப், உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் சித்தார்த் ரங்கநாதன் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’வணக்கம்டா மாப்ள’ திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version