சினிமா செய்திகள்

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தில் யோகிபாபு: பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!

Published

on

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் இந்த படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜிவி பிரகாஷ் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் புதிய படம் ஒன்றில் சமீபத்தில் ஒப்பந்தமானார். அறிமுக இயக்குனர் இயக்கத்தில் கெளசிக் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தின் நாயகி குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் யோகிபாபு இணைந்துள்ளார். இருவரும் சேர்ந்து இந்த படத்தின் காமெடியில் கலக்குவார்கள் என்றும் காமெடி மற்றும் ஆக்சன் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் ஷ்ரவன் என்பவர் ஒளிப்பதிவும் ஜிஜேந்திரன் என்பவர் படத்தொகுப்பு பணி செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version