சினிமா செய்திகள்

ஜிவி பிரகாஷ் – சீனு ராமசாமி திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!

Published

on

தமிழ் திரையுலகில் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசை ஜிவி பிரகாஷ் என்பதும் இவர் தற்போது சுமார் பத்து படங்கள் வரை நடித்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உள்பட ஒருசில திரைப்படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை காயத்ரி இந்த படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதும் ஜிவி பிரகாஷ் – காயத்ரி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் ஜீவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுளார். இந்த படத்திற்கு படக்குழுவினர் ’இடிமுழக்கம்’ என டைட்டில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டைட்டில் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷின் இசையில், வைரமுத்துவின் பாடல் வரிகளில், ஜெயமோகனின் வசனத்தில் உருவாகி வரும் இந்தப் படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் முதல்முதலாக சீனுராமசாமி ஒரு ஆக்சன் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version