சினிமா செய்திகள்

மீண்டும் ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ்!

Published

on

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் படத்திற்கு முக்கியமான ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் – ஜி.வி. பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “பொல்லாத பூமி” எனும் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக சமூக வலைதளமான ட்விட்டரில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.

வடசென்னை படத்திற்கு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் அசுரன். இந்த படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்து வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். வில்லனாக பிரபல இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார்.

வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்திக்கு அசுரன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version