சினிமா செய்திகள்

வெல்லப்போவது குருவா? சிஷ்யனா? வார் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

Published

on

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் மற்றும் வாணி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள வார் படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் ஆக்‌ஷன் படங்களுக்கு புகழ்பெற்ற ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் முதல் முறையாக இணைந்து மோதுகின்றனர். யஷ் ராஜ் சோப்ரா தயாரிப்பில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக பிரம்மாண்டமான முறையில் உருவாகி உள்ள இந்த படம் வரும், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி பண்டிகையன்று ரிலீசாகிறது.

குருவான ரித்திக் ரோஷன், இந்திய படையில் இருந்து அந்நிய நாட்டு தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து விடுவதாகவும், அவரை முறியடிக்க அவரது சிஷ்யனான டைகர் ஷெராஃபை இந்திய ராணுவம் அனுப்புவதாகவும், இருவருக்குள்ளும் நடக்கும் யுத்தத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக டிரைலரின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இல்லை இருவரும் இணைந்து ஒரு சீக்ரெட் ஆபரேஷனை எதிரி நாட்டின் மீது செலுத்த திட்டமிட்டுள்ளனரா என்பது படத்தை பார்த்தால் தெரிந்துவிடும்.

seithichurul

Trending

Exit mobile version