விமர்சனம்

யோகிபாபுவின் கூர்கா விமர்சனம்!

Published

on

ஜி.வி. பிரகாஷின் டார்லிங், அதர்வாவின் 100 போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக கலக்கி இருக்கும் கூர்கா படம் எப்படி வந்திருக்கிறது என்பதை பார்ப்போமா?

இரவில் விசில் சத்தம் கொடுத்துக் கொண்டே திருடர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றும் கூர்கா இன மக்களை குறித்த படமாக இந்த படம் வெளிவந்துள்ளது.

ராணுவ வீரர்களுக்கு இணையான வீரர்கள் கூர்காக்கள் என்ற குறிப்பை இயக்குநர் வெளிப்படுத்திய இடத்திலேயே ஸ்கோர் செய்துள்ளார்.

தர்மபிரபு படத்திற்கு பிறகு மீண்டும் ஹீரோவாக யோகி பாபு அசத்தியுள்ளார். இந்த படத்தில், யோகிபாபுவுடன் ஒரு நாயும் சூப்பராக நடித்துள்ளது.

போலீசாக ஆக வேண்டும் என்ற கனவோடு வளரும் யோகி பாபு, தனது கனவு நேராததால், தங்களது குளத் தொழிலான கூர்கா வேலையே செய்கிறார்.

ஷாப்பிங் மால் ஒன்றில், அமெரிக்க பெண் தூதர் சில மர்ம நபர்களிடம் சிக்கித் தவிக்கும் வேளையில், அவரையும் மாலில் உள்ள மக்களையும் தனது வளர்ப்பு நாயின் துணை கொண்டு எப்படி காப்பாற்றினார் இந்த கூர்கா என்பதே கூர்கா படத்தின் அட்டகாசமான கதை.

ஆரம்பத்தில் படத்தில் அதிக இடத்தில் தொய்வு இருப்பதால், படம் ஸ்டார்ட் ஆக சற்று சிரமப்பட்டது.

ஆனால், ஷாப்பிங் மால் ஹைஜாக் சம்பவத்திற்கு பிறகு நடக்கும் விசயங்கள் எல்லாம் விர்ரென்று ராக்கெட் போகும் வேகத்தில் திரைக்கதை நகர்கிறது.

 

கூர்காக்கள் குறித்தும், ராணுவ வீரர்கள் குறித்தும் இந்த படத்தில் அருமையான கருத்தை இயக்குநர் சாம் ஆண்டன் பதிவு செய்துள்ளார்.

மொத்தத்தில் யோகி பாபுவின் இந்த கூர்கா குழந்தைகளை கவரும் விதத்தில் இருந்தாலும், சில தொய்வான காட்சிகளை இயக்குநர் தவிர்த்திருந்தால், மாபெரும் வெற்றியை பதிவு செய்திருப்பான்.

சினி ரேட்டிங்: 2.25/5.

author avatar
seithichurul

Trending

Exit mobile version