தமிழ்நாடு

டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம்: கோவை ஆட்சியர் உத்தரவு!

Published

on

டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் ரவுடி பேபி சூர்யா என்ற என்ற பெயரில் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் அவரது வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் தரக்குறைவான விமர்சனங்கள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரவுடிபேபி சூர்யா மீது புகார் அளித்தார். அந்தபுகாரில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசி வீடியோ வெளியீட்டு இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரில் விசாரித்த கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த ஜனவரி மாதம் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தஅர். இந்த நிலையில் தற்போது கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு சிறையிலிருக்கும் ரவுடி பேபி சூர்யாவிடம் நேற்று வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டால் குறைந்தது ஒரு வருடம் ஜாமீனில் கூட வெளியிட முடியாது என்பதால் ரவுடிபேபி சூர்யாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version